கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! அதிர்ச்சியில் அமெரிக்க திரையுலகம்
- சைக்கோ(1998), சூப்பர்மேன் டூம்ஸ்டே, வால்கனோ, சிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அன்னே ஹெச்
- அன்னே ஹெச் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க தயாராகி வருகின்றனர்
பிரபல அமெரிக்க நடிகை அன்னே ஹெச் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ஹாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச்(53) தனது மினி கூப்பர் காரில் பயணித்தார்.
அப்போது கட்டிடம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து அன்னேவை மீட்டனர்.
REUTERS
கடந்த 5ஆம் திகதி நடந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த அன்னே ஹெச், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடலில் தீக்காயங்கள் அதிகளவில் இருந்ததாலும், மூளைப்பகுதியில் பலத்த அடிபட்டிருந்ததாலும் உயிர்பிழைப்பது கடினம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அன்னே ஹெச் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணம் ஹாலிவுட் திரையுலகத்தை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
Getty Images