சிவகார்த்திகேயனை பற்றி இமான் கூறியதற்கு காரணம் இதுதான்: நடிகையின் கருத்து
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காமல் பலரும் அவர் மீது குறை சொல்லி வருவதாக நடிகை அனுபரமி கருத்து தெரிவித்துள்ளார்.
இமானின் பேட்டி
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இமான், இனி சிவகார்த்திகேயனுடன் இணைய வாய்பே இல்லை. அடுத்து ஜென்மத்தில் கூட இணைய வாய்ப்பில்லை எனவும்..
என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர் செய்ததை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
இமானின் இந்த பேட்டி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர்.
நடிகை அனுபரமியின் கருத்து
நடிகை அனுபரமி ''இந்த விடயம் அவரது குழந்தைகளை பாதிக்கும் என்றால், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பின் இமான் ஏன் இந்த விடயத்தை பற்றி கூற வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ''இந்த விடயத்தில் சிவகார்த்திகேயன் மீது தவறு இருக்கிறதா இல்லையா என்பது தெரியாமல் அவர் மீது சிலர் வன்மத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.
தொகுப்பாளராக இருந்து கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளார். வளர்ந்து வரும் ஒரு நடிகர் மீது அசிங்கத்தை சுமத்துவதற்கு காரணம் என்னவாக இருக்கும், சிவாகார்த்திகேயன் வளர்ச்சி பிடிக்காத சிலர் இமானை தூண்டிவிட்டு இவ்வாறு செய்திருக்கிறார்கள்.
இமான் தனது குழந்தைகளுக்காக இந்த விடயத்தை வெளியில் சொல்லவில்லை என்று சொல்கிறார், ஏன் சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் இல்லையா? அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? யாராக இருந்தாலும் அந்தரங்கத்தை பரப்பாதீர்கள்'' என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |