39 வயதில் காதலில் விழுந்த நடிகை அனுஷ்கா? திருமணம் குறித்து வெளிவந்த தகவல்
நடிகை அனுஷ்கா பிரபல இயக்குனர் ஒருவரை விரைவில் காதல் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரைஉலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி.
39 வயதாகும் அனுஷ்கா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவர் திருமணம் குறித்து அவ்வபோது கிசுகிசுக்கள் வரும்.
இந்த நிலையில் அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி அனுஷ்கா, தெலுங்கு இயக்குனரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.