தன்னை விட வயது குறைவான நபரை திருமணம் செய்யும் 39 வயதான நடிகை அனுஷ்கா? திரையுலகில் பரவும் தகவல்
பிரபல திரைப்பட நடிகை அனுஷ்கா தன்னை விட வயதில் குறைவான தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த், அஜித்குமார், சூர்யா, விக்ரம், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா 39 வயது ஆகிறது. ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை.
பாகுபலி படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பேசப்பட்டது.
பின்னர் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவியது. இவற்றையெல்லாம் அனுஷ்கா மறுத்து வந்தார்.
இந்த நிலையில் துபாய் தொழில் அதிபர் ஒருவருடன் அனுஷ்காவுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளதாகவும், அந்த தொழில் அதிபர் அனுஷ்காவை விட வயதில் இளையவர் என்றும் திரையுலகில் தகவல் பரவி வருகிறது.