Manjummel Boys நடிகரை கரம்பிடித்த தமிழ்ப்பட நடிகை: வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை அபர்ணா தாஸ் மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்பொல் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தமிழில் பீஸ்ட், டாடா படங்களில் நடித்தவர் அபர்ணா தாஸ். மலையாளத்தில் சில படங்களில் நடித்த இவர், நடிக்க வருவதற்கு முன் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி இருந்தார்.
பத்திரிகைகளுக்கு மொடலாகவும் இருந்த அபர்ணா தாஸ், 2018ஆம் ஆண்டில் வெளியான Njan Prakashan என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவரும் 'மனோகரம்' எனும் படத்தில் உடன் நடித்த பிரபல மலையாள நடிகர் தீபக் பரம்பொலும் காதலித்து வந்துள்ளனர்.
தீபக் சமீபத்தில் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் நடித்திருந்தார். இருவரின் பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இவர்களின் திருமணம் கேரள பாரம்பரிய முறைப்படி எளிமையான முறையில் நடந்தது. இதில் இருவரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
தீபக், அபர்ணாவின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. நட்சத்திர ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |