பெண் தெய்வத்தை அவமதித்தாரா? நடிகை வழங்கிய காணிக்கையால் சர்ச்சை
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பழங்குடியின திருவிழாவின் போது நடிகை வழங்கிய காணிக்கையால் சர்ச்சை எழுந்துள்ளது.
பாரம்பரிய திருவிழா
தெலுங்கானாவில் மேடாரம் ஜாதாரா என்பது பெண் தெய்வங்களை கௌரவிக்கும் பழங்குடி திருவிழாவாகும்.
முலுகு மாவட்டத்தின் தத்வாய் மண்டலத்தின் மேடாரம் கிராமத்தில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் இவ்விழாவில் பக்தர்களுக்கு தங்கள் எடைக்கு இணையான வெல்லத்தை நேர்த்திகடனாக செலுத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு வருகிற 28ம் திகதி தொடங்கி 31ம் திகதி வரை நடைபெறவிருக்கிறது.

சர்ச்சையான காணிக்கை
இதன்போது நடிகை டீனா ஸ்ராவ்யா, வழங்கிய காணிக்கை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கிராமத்திற்கு வந்த நடிகை டீனா, துலாபாரம் தராசில் தன்னுடைய வளர்ப்பு நாயை அமர்த்தி, மறுபுறம் வெல்லத்தை காணிக்கையாக செலுத்தினார், இக்காட்சிகள் வெளியாகி வைரலாக மக்களின் கோபத்தை சம்பாதித்துள்ளார்.
தாங்கள் தெய்வமாக வழங்கும் சம்மக்கா சாரலம்மாவை நடிகை அவமதித்து விட்டதாக கூறி கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இதுதொடர்பான விளக்கம் அளித்துள்ள நடிகை டீனா, தனது செல்ல நாய் நோய்வாய்ப்பட்டதால் காணிக்கை செலுத்த வேண்டிக்கொண்டதாகவும், அதனாலேயே இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பழங்குடி மரபுகளை அவமதிக்கும் எண்ணம் தனக்கு இல்லை எனவும், யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.