மைக்ரோமேக்ஸ் தொழிலதிபரை மணந்த நடிகை அசினின் மொத்த மதிப்பு
இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை அசினின் சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம்.
அசின்
2001ஆம் ஆண்டில் மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகை அசின். அதன் பின் தெலுங்கு, தமிழ் மொழிப்படங்களில் பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக மாறினார்.
2011ஆம் ஆண்டு வெளியான காவலன் படத்திற்கு தமிழில் நடிக்காத அசின், இந்தி திரையுலகிற்கு சென்று சில திரைப்படங்களில் நடித்தார்.
கடைசியாக 2015ஆம் ஆண்டு ஆல் இஸ் வெல் என்ற இந்தி படத்தில் நடித்த அசின், அடுத்த ஆண்டே திருமணம் செய்துகொண்டு நடிப்பிற்கு முழுக்குப்போட்டார். 
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் ஷர்மாவைத்தான் அவர் திருமணம் செய்தார். அசினின் மொத்த சொத்து மதிப்பு ரூ.150 கோடி முதல் ரூ.200 என்று கூறப்படுகிறது.
சொத்துக்கள்
இவர் தனது கணவருடன் டெல்லியில் உள்ள farmhouseயில் வசித்து வருகிறார்.
முன்னதாக, அசினுக்கு மும்பை, கேரளா மற்றும் டொரோண்டோவில் சொத்துக்கள் உள்ளன. 
அசின்-ராகுல் ஷர்மா தம்பதி ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2, பென்ட்லே சூப்பர்ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ எக்ஸ்6 மற்றும் மெர்சிடிஸ் ஜிஎல்450 ஆகிய ஆடம்பர கார்களை வைத்துள்ளனர்.
2025யில் ராகுல் ஷர்மாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1300 கோடி என்று கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |