வாங்கிய காசுக்கு என்னைப்பற்றி அவதூறு கூறட்டும்: நடிகை பாவனா கொந்தளிப்பு
நீதிமன்ற விசாரணையில் வழக்கு கையாளப்பட்டது குறித்து நடிகை பாவனா பதிவிட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை பாவனா
கேரளாவில் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு கையாளப்பட்ட விதம் குறித்து, நடிகை பாவனா கடுமையான வார்த்தைகளில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
அவர் தனது சமூக ஊடகப் பதிவில், பல ஆண்டு வலி, கண்ணீர் மற்றும் உணர்ச்சிப் போராட்டங்களுக்குப் பிறகு தான் உணர்ந்த ஒரு வேதனையான உண்மை இது என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் "இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதில்லை. இந்தத் தீர்ப்பு பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அது எனக்கு ஆச்சரியமாக இல்லை.
2020ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே, ஏதோ சரியில்லை என்பதை நானா உணர்த் தொடங்கினேன். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட குற்றவாளியின் விடயத்தில், வழக்கு கையாளப்பட்ட விதத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அரசு தரப்பும் கவனித்தது.
அனைத்து நீதிமன்றங்களும் ஒரே மாதிரி செயல்படுவதில்லை என உணர்ந்துள்ளேன்.
என் மீது அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள், வாங்கிய காசுக்கு சுதந்திரமாக பணியை தொடரட்டும்" என்றும் தெரிவித்துள்ளார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |