பிரபல நடிகை பிந்து கோஷ் காலமானார்
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகையாக வலம் வந்த பிந்து கோஷ் காலமானார்.
பிந்து கோஷ்
1982ஆம் ஆண்டில் வெளியான கோழி கூவுது படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து கோஷ்.
அதனைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகையாக பல நடித்த இவர், 1992ஆம் ஆண்டுக்கு பின் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில், தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் கணவர் அழித்துவிட்டதாகவும், தனது உடல்நல பிரச்சனைகளை சமாளிக்க பணம் இல்லாமல் சிரமப்படுவதாகவும் கூறியிருந்தார்.
76வது வயதில்
மேலும், பல நடிகர்களிடம் உதவி கோரியும் யாரும் உதவவில்லை என்றும் கண் கலங்கி பேசியிருந்தார்.
இந்த நிலையில் பிந்து கோஷ் தனது 76வது வயதில் உடல்நிலை பாதிப்பால் இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலகில் இருந்தும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |