அன்புக்கு நன்றி! 40 வயதில் முதல் குழந்தைக்கு தாயான பிரபல தமிழ் சீரியல் நடிகை நெகிழ்ச்சி... புகைப்படம்
சீரியல் நடிகை சந்திரா தனது 40வது வயதில் ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
தமிழில் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள சந்திரா கோலங்கள், வசந்தம், காதலிக்க நேரமில்லை, பாசமலர் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இவருக்கு 1 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் பகிர்ந்து இருந்தார்.
பிரபலங்களும் ரசிகர்களும் இந்த ஜோடியை வாழ்த்தி இருந்தனர். இந்நிலையில் தற்போது சந்திரா - டோஷ் கிறிஸ்டி ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை கையை பிடித்தப்படியே எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருக்கும் சந்திரா ஆண் குழந்தை பிறந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில், ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. எங்களுக்காகவும் எங்களின் குழந்தைக்காகவும் பிரார்த்தனை செய்தவர்களுக்கும் அன்பு செலுத்தியவர்களுக்கும் நன்றி, கடவுளுக்கும், பெற்றோருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.