பிரபல சீரியல் காதலிக்க நேரமில்லை நடிகைக்கு முடிந்த திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்:
பிரபல சீரியல் நடிகையான சந்திரா லக்ஷ்மண் தன்னுடைய திருமண்ம தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான மனசெல்லாம் படம் மூலம் நடிகையானவர் சந்திரா லக்ஷ்மண்.
அதன் பின், சினேகா நடித்த ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியின் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களிலும் நடித்த நிலையில், தொலைக்காட்சி தொடரான காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.
இதையடுத்து, மலையாள தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தத் துவங்கிய இவர், சில காலம் பிரேக்கில் இருந்தார்.
Congratulations, Chandra Lakshaman and Tosh Christy ? The Surya TV family wishes you a very happy married life! ❤️#SuryaTV #SwanthamSujathaOnSuryaTV #ChandraLakshman #ToshChristy pic.twitter.com/05U4ov2VGQ
— Surya TV (@SuryaTV) August 26, 2021
தற்போது மீண்டும் மலையாளத்தில் ஸ்வந்தம் சுஜாதா என்ற சீரியலில் இவர் நடித்து வந்த நிலையில், அந்த சீரியலில் நடித்து வரும்டோஷ் கிறிஸ்டியினை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எங்களின் குடும்பத்தாரின் ஒப்புதல் மற்றும் ஆசியுடன் நாங்கள் புது பயணத்தை துவங்கும் நேரத்தில் நலம் விரும்பிகளாகிய உங்களையும் எங்கள் சந்தோஷத்தில் சேர்த்துக்கொள்ள விரும்புகிறோம்.
என் திருமணம் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறேன். எங்களை ஆசிர்வதிக்கவும், எங்களுக்காக பிரார்த்தனை செய்யவும் என குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.