கொழுப்பை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை உயிரிழப்பு! எச்சரிக்கை செய்தி
பிரபல கன்னட நடிகை சேத்தனா ராஜ் கொழுப்பை குறைப்பதற்கான ப்ளாஸ்டிக் அறுவை செய்து கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை தவறாக போனதால் அவர் இறந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 21 வயதான சேத்தனா ராஜ் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் நேற்று பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொழுப்பை குறைப்பதற்கான ப்ளாஸ்டிக் அறுவை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்.
தனது குடும்பத்தாருக்கு இது குறித்து அவர் தகவல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சைக்கு பின்னர் அவர் நுரையீரலில் திரவம் சேர ஆரம்பித்தது, நேரமாக நேரமாக சேத்தனா உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
அவரின் இறப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சேத்தனாவின் உடலுக்கு வேறு மருத்துவமனையில் உடற்கூராய்வு நடக்கவுள்ளது.
அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை நிர்வாக குழு மீது பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
சேத்தனாவின் திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.