சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தனது உயிரை மாய்த்துக்கொண்டார்
சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சித்ராவின் தந்தை மரணம்
சின்னத்திரையில் மிக பிரபலமாக இருந்தவர் நடிகை சித்ரா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் உள்ள பூந்தமல்லியில் நடந்த பரப்பிடிப்பின் போது தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனிடையே, சித்ராவின் தந்தை காமராஜ் என்பவர், அபிராமபுரம் காவல் உதவி ஆய்வாளராக இருந்து கடந்த 2019-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். தற்போது, சென்னை திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை சித்ராவின் தந்தை வீட்டிற்கு உறவினர்கள் வந்து கதவை தட்டியுள்ளனர். ஆனால், அவர் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்துள்ளனர்.
அப்போது, வீட்டில் உள்ள மின்விசிறியில் காமராஜ் தனது உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. பின்னர், சம்பவத்தை அறிந்த திருவான்மியூர் காவல்துறையினர் காமராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது மகள் இறந்த விரக்தியில் காமராஜ் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |