அவர்களது வாரிசு எனது வயிற்றில் வளர்கிறது! கதறும் நடிகை திவ்யா
தனது உடல்நிலை சீரான பின்னர் காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளதாக நடிகை திவ்யா தெரிவித்துள்ளார்
மதம் மாற தன்னை தனது கணவர் கட்டாயப்படுத்தியதாக திவ்யா குற்றம்சாட்டியுள்ளார்
சின்னத்திரை நடிகை திவ்யா தன்னை மதம் மாற அர்ணவ் கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். சின்னத்திரை பிரபலங்களான அர்ணவ் மற்றும் திவ்யா இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்து வருகின்றனர்.
கர்ப்பமாக இருக்கும் திவ்யா தனியார் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சை பெற்று திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது கணவர் மீது மேலும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

அவர் கூறுகையில், 'அர்ணவ் என்னை மதம் மாற கட்டாயப்படுத்தினார். நான் முஸ்லிமாக மதம் மாறிய பின்னரே திருமணம் செய்து கொண்டார். இதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடன் ஒரே வீட்டில் 45 நாட்கள் பேசாமல் இருந்தார். எனது செல்போன் எண்ணை 'பிளாக்' செய்து விட்டார்.
எனது உடல் நலம் சரியான உடன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுவேன். இது தொடர்பாக அர்ணவின் பெற்றோர் கேட்க வேண்டும். அவர்களது குடும்ப வாரிசு எனது வயிற்றில் வளர்கிறது. தற்போது மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்றேன். குழந்தை நலமாக இருப்பதாக தெரிவித்தனர்' என கூறியுள்ளார்.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        