எடப்பாடி பழனிச்சாமியை விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதியில்லை: நடிகை கவுதமி ஆதங்கம்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்த நிலையில் நடிகை கவுதமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகை கவுதமி கண்டனம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோயிலில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான கவுதமி நேற்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதியில்லை.
இத்தனை ஆண்டுகளாக அரசியலில் சாதித்து படிப்படியாக கட்சியை ஒருங்கிணைத்து, 4 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்தவரை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் மீண்டும் நல்ல ஆட்சி அமையும். அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவேன். அதிமுக கூட்டணியில் தவெக இணையுமா என்பது போக போக தெரியும். அதற்கான முடிவை எடப்பாடி அறிவிப்பார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |