உங்கள் குழந்தைகளுக்காக பாதைகள் ஒன்றாகும் என நம்புகிறேன்! தனுஷ்- ஐஸ்வர்யா குறித்து நடிகை ஆர்த்தி கருத்து
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி பிரிவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து நகைச்சுவை நடிகை ஆர்த்தி பேசியுள்ளார்.
தங்களின் 18 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்தனர்.
அவர்களின் இந்த முடிவு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பிரபல நகைச்சுவை நடிகையும், பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் புகழ்பெற்றவருமான நடிகை ஆர்த்தியின் டுவிட்டர் பதிவில், 18 வருட அன்பான வாழ்க்கை வீணாக கூடாது எல்லா கருத்து வேறுபாடுகளும் விவாகரத்தில் தான் முடியும் என்பது உண்மை அல்ல.
18 வருட அன்பான வாழ்க்கை வீணாக கூடாது எல்லா கருத்து வேறுபாடுகளும் விவாகரத்தில் தான் முடியும் என்பது உண்மை அல்ல இந்த சின்ன பிரிவும் உங்களை நீங்கள் ஆராய்ந்து, விட்டு கொடுத்து, உங்கள் குழந்தைகளுக்காக இருவரது பாதையும் வெவ்வேறாக ஆகாமல் ஒன்றாகும் என்று நம்புகிறேன். இறைவனை வேண்டுகிறேன். https://t.co/WIjnY6plue
— Actress Harathi (@harathi_hahaha) January 18, 2022
இந்த சின்ன பிரிவும் உங்களை நீங்கள் ஆராய்ந்து, விட்டு கொடுத்து, உங்கள் குழந்தைகளுக்காக இருவரது பாதையும் வெவ்வேறாக ஆகாமல் ஒன்றாகும் என்று நம்புகிறேன்.
இதற்காக இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.