48 வயதில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த பிரபல நடிகை! வெளியிட்ட புகைப்படம்
பிரபல ஹாலிவுட் நடிகை ஹிலாரி ஸ்வான்க் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்ததை சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
ஹிலாரி ஸ்வான்க்
1992ஆம் ஆண்டு வெளியான Buffy the Vampire Slayer படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹிலாரி ஸ்வான்க். அதனைத் தொடர்ந்து 21 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சாட் லாவ் என்பவரை 1997ஆம் ஆண்டு திருமணம் செய்த ஹிலாரி ஸ்வான்க், 2007ஆம் ஆண்டு அவரை பிரிந்தார். அதன் பின்னர் 2018ஆம் ஆண்டு பிலிப் ஸ்னேய்டர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
@GREGG DEGUIRE/FILMMAGIC
இரட்டைக் குழந்தைகளுக்கு தாய்
தற்போது 48 வயதாகும் ஹிலாரி ஸ்வான்க் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். இந்த நிலையில் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் அவரது பதிவில், 'இது எளிதானது அல்ல. ஆனால் ஒரு பையன் (மற்றும் பெண்) என்பது மதிப்புக்குரியது. ஈஸ்டர் வாழ்த்துக்கள்! தூய சொர்க்கத்தில் இருந்து இடுகையிடுகிறேன்' என கூறியுள்ளார்.
Hilary Swank@Instagram
பல தொலைக்காட்சி தொடர், நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள ஹிலாரி கோல்டன் குளோப் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
@Michael Tran / FilmMagic