நண்பன் பட நடிகைக்கு ஆண்குழந்தையா... அப்பா யார் தெரியுமா?
நடிகர் விஜயிற்கு ஜோடியாக நடித்த நடிகை இலியானாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பில் அவர் தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார். பல நட்சத்திரபட்டாளங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.
நடிகை இலியானா
தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் நடிகர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்து தமிழ் மக்களை தனது நடிப்பாலும் நடனத்தினாலும் கவர்ந்தார்.
இதையடுத்து அவருக்கு வெற்றியான படங்கள் ஏதும் அமையவில்லை.
இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூகஊடகத்தில் தெரிவித்திருந்தார். தற்போது மகன் பிறந்திருப்பதாகவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இலியானாவின் ஆண் குழந்தை
இலியானாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் இருந்து தான் வருகின்றது.
அதாவது தந்தை யார் என்று இன்று வரை கூறியில்லை. மேலும் திருமணம் ஆகியவாறு ஒரு புகைப்படங்களும் பகிரப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 1ம் திகதி தனக்கு மகன் பிறந்ததாக இலியானா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்து 'Koa Phoenix Dola' என பெயர் சூட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |