நடிகை ஜெயலட்சுமி அதிரடி கைது! பாடலாசிரியர் சினேகன் பேட்டி
போலி ஆவணங்கள் மூலம் பணம் வசூலித்த புகாரின் அடிப்படையில் நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.
போலி ஆவணங்கள் புகார்
சினேகம் பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி போலி ஆவணங்கள் மூலம் பணம் வசூலித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பான புகாரினை பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்திருந்தார்.
இந்த நிலையில், போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை திருமங்கலம் பொலிஸார் ஜெயலட்சுமியை கைது செய்தனர்.
அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சினேகன் நேர்காணல்
இதனைத் தொடர்ந்து சினேகன் நேர்காணல் ஒன்றில் பேசியபோது, 'நான் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர்கள் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் தான் முடிவெடுக்கும். இதனை பேசித் தீர்த்திருக்கலாம்.
ஆனால், மேலும் மேலும் இதை அவர்கள் பெரிதாக்கியதால் நீதிமன்றத்தில் அவர்களை நிரூபிக்க வேண்டும். எவ்வளவு வசூல் செய்தார்கள் என்று தெரியாது.
என் பெயரை உபயோகப்படுத்தக் கூடாது என்பது மட்டும் என்னுடைய வாதம். அதற்கு நான் பலமுறை முயற்சித்தும் அவர்கள் சமாதானத்திற்கு உடன்படவில்லை. இது அரசியல் ரீதியாக போகக்கூடாது என்று தான் நீதிமன்றத்தை அணுகினேன்' என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |