உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள நடிகை ஜோதிகாவின் டயட் சீக்ரெட் இதுதான்
90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் தனது அபார நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார்.
இவர் திருமணத்திற்கு பிறகு படங்களை குறைவாகவே நடித்து வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ''36 வயதினிலே'' படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து பெண்களை மையமாக கொண்டு தயாரிக்கப்படும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் தனது சமூக வலைத்தளங்களில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பகிர்ந்திருந்தார்.
அதில் அவர் தலைகீழாக படிக்கட்டுகளில் இறங்குவது மற்றும் தலைகீழாக நின்றபடி பந்து விளையாடுவது என பல விஷயங்களை செய்துள்ளார்.
மேலும் சமீபத்தில் இவர், தானும் தனது கணவரும் உடற்பயிற்சியில் போட்டி போடுவதாக தெரிவித்திருந்தார்.
ஜோதிகாவின் டயட் சீக்ரெட்
தினமும் 2 மணிநேரம் கடுமையாக உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டும் அல்ல, தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
காலையில் பெரும்பாலும் பழங்கள் மற்றும் அவித்த உணவுகளை எடுத்துகொள்ளவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், மத்திய உணவாக நிறைய காய்கறிகள் மற்றும் சிறிதளவு சாதம் எடுத்துக்கொள்வாராம்.
சில சமயங்களில் தனக்கு மிகவும் பிடித்த உணவுகளை சாப்பிட்டாலும், அதற்கு ஏற்றார் போல உடற்பயிற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |