நடிகை கமலா காமேஷ் குறித்த செய்தி வதந்தி.., மகள் உமா ரியாஸ் கான் மறுப்பு
நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை கமலா காமேஷ் உடல்நலம் குறித்த செய்தி வதந்தி என்று அவரது மகள் கூறியுள்ளார்.
செய்தி வதந்தி
பிரபல நடிகையான கமலா காமேஷ் (72) இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், அவரது மகள் உமா ரியாஸ் கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1952-ம் ஆண்டு பிறந்தார். இவர், சம்சாரம் அது மின்சாரம், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.
ஜெயபாரதி இயக்கிய குடிசை படத்தில் முதல் முதலாக நடிக்க தொடங்கிய கமலா காமேஷ் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், மேடை நாடகங்களிலும், சின்னத்திரையிலும் நடித்துள்ளார்.
இவர் இசையமைப்பாளர் காமேஷை திருமணம் செய்து கொண்டார். அவர் 1984ம் ஆண்டு காலமானார்.
தற்போது தனது மகளான உமா ரியாஸ் கான் குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கமலா காமேஷ் மறைவு குறித்த தகவலுக்கு அவரது மகள் உமா ரியாஸ் மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் பேசுகையில், "எனது அம்மா நலமுடன் இருக்கிறார். எனது மாமியாரும் ரியாஸ் கானின் தாயுமான ரஷீதா பானுதான் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார். அவருக்கு வயது 72" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |