எனக்கு ஒரு ஆண் வேண்டாம்! தன்னை தானே திருமணம்.. பிரபல தமிழ்பட நடிகை வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி
என் கணவன் என் தோழன் என்ற மொழிமாற்று தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் இடையில் பிரபலமானவர் கனிஷ்கா சோனி
கனிஷ்கா சோனி 2007ஆம் ஆண்டு பாத்ரூம் சிங்கர் என்ற நிகழ்ச்சி பங்குபெற்றதன் கனிஷ்கா தொலைக்காட்சியில் அறிமுகமானார்
பிரபல நடிகை கனிஷ்கா சோனி தன்னை தானே திருமணம் செய்துகொண்டதாக வீடியோ வெளியிட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் நடிகர் விவேக் நடித்த பத்தாயிரம் கோடி படத்தில் நடித்தவர் கனிஷ்கா சோனி(34). இவர் தெலுங்கு, இந்தி படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர்.
மேலும், குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த கனிஷ்கா, மொடலாகவும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் இவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Actress Kanishka Soni from “Diya Aur Baati Hum" marries herself.
— Transcontinental Times (@Transctimes) August 19, 2022
She shares photos wearing vermilion and mangalsutra.
Soni says, "marriage is not just about sex. 90 % of girls not happy with their marriage."#KanishkaSoni #ViralVideo #SelfMarriage pic.twitter.com/lwWkMPttOi
கழுத்தில் தாலி, நெற்றியில் குங்குமத்துடன் கனிஷ்கா வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக கனிஷ்கா கூறுகையில்,
'தனிமை தான் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நான் நினைத்தபடி எந்த ஒரு ஆணையும் இதுவரை என் வாழ்நாளில் சந்திக்கவில்லை. அதனால் தனியாகவே இருக்க முடிவு செய்துவிட்டேன். திருமணம் என்பது உடல் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல அதில் காதல், நேர்மை ஆகியவையும் இருக்க வேண்டும். நான் குடித்துவிட்டு இவ்வாறு சொல்லவில்லை. எனக்கு குடிப்பழக்கமும் கிடையாது' என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே குஜராத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து என்ற 24 வயது இளம்பெண், தன்னை தானே திருமணம் செய்துக்கொண்டு தனியாக தேனிலவு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.