தலைவன் சாட்டையால் அடித்துக்கொள்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை: நடிகை கஸ்தூரி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி துஷ்பிரயோகத்திற்கு ஆளான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிமுக, பாஜக கட்சியினர் இதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை காலணி அணிய மாட்டேன் என ஆவேசமாக கூறினார்.
மேலும், தனது வீட்டிற்கு வெளியே தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். அவரது இந்த செயலை விமர்சித்து எஸ்.வி.சேகர், அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, சாட்டையால் கட்சித்தலைவர் ஒருவர் அடித்துக் கொள்வதை பார்க்க முடியவில்லை என கூறியுள்ளார்.
அவர் தனது பதிவில், "என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை. சமூகவிரோதிகளை அடிச்சு தூக்க வேண்டிய தலைவன், தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளுவதை பார்க்க முடியவில்லை. அண்ணாமலையின் வழி அனைவரின் வலியானால், தமிழகம் அரசீற்றம் கொண்டால் மாற்றம் வரும். வர வேண்டும்" என தெரிவித்தார்.
என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை. சமூகவிரோதிகளை அடிச்சு தூக்க வேண்டிய தலைவன் தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்ளுவதை பார்க்க முடியவில்லை.
— Kasturi (@KasthuriShankar) December 27, 2024
அண்ணாமலையின் வழி அனைவரின் வலியானால், தமிழகம் அரசீற்றம் கொண்டால், மாற்றம் வரும். வரவேண்டும்.#annauniversityRape pic.twitter.com/rugMoZVYu2
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |