பொதுமன்னிப்பு கேட்டுவிட்டேன்! நடிகை கஸ்தூரி முன் ஜாமின் மனுதாக்கல்
தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரியுள்ளார்.
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு
தமிழ்ப்பட நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு மக்கள் குறித்து பேசிய விடயம் சர்ச்சையானது.
அதனைத் தொடர்ந்து கஸ்தூரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் பொலிஸார் சம்மன் அளிக்க சென்றபோது கஸ்தூரியின் வீடு பூட்டப்பட்டிருந்தது. மேலும் அவர் தலைமறைவானார்.
முன் ஜாமின் மனு
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி வழக்குகளில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில் 'உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே தி.க., தி.மு.க மற்றும் பல்வேறு அமைப்பினர் தனது பேச்சை திரித்து பரப்பிவிட்டுள்ளனர்' என கூறியுள்ளார்.
மேலும், பொதுமன்னிப்பு கோரி உள்ளதாகவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன் என்பதால் முன்ஜாமின் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |