ஜாமீன் நிபந்தனைகளை தளர்வு செய்ய கஸ்தூரி மனுதாக்கல்
நடிகை கஸ்தூரி ஜாமீன் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
மனு தள்ளுபடி
சென்னையில் கடந்த 3ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டார்.
அவர் மீது புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவானதாக் கூறப்பட்ட கஸ்தூரி, ஐதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தளர்வு செய்யக்கோரி
பின்னர் எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கஸ்தூரி தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரியுள்ளார். இதற்காக அவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |