நடிகை கஸ்தூரி கைதாவதற்கு முன்பு வெளியிட்ட பரபரப்பு வீடியோ
கைது நடவடிக்கைக்கு முன்பாக நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கஸ்தூரியின் வீடியோ
வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாக பேசியது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கில் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த கஸ்தூரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே, தலைமறைவான கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.பின்னர், நேற்று ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை பொலிஸார் சென்னை அழைத்து வந்தனர். அவருக்கு, வரும் நவம்பர் 29 -ம் திகதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது நடவடிக்கைக்கு முன்பாக நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் அவர், "நான் தலைமறைவாகவில்லை, ஓடி ஒளியவில்லை. ஐதராபாத்தில் எனது வீட்டில் தான் இருந்தேன்.
பின்னர், படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் போது கைது செய்தனர். என்னிடம் செல்போன் இல்லை. எனது வழக்கறிஞரிடம் கொடுத்திருந்தேன்" என்று பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |