அழகு பெண் எதற்கு தன்னை தானே மாய்த்து கொள்ள வேண்டும்? தூரிகை மரணம் குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி
தூரிகையின் தற்கொலையால் அதிர்ச்சியில் உறைந்துள்ளேன் என நடிகை கஸ்தூரி உருக்கம்
அந்த அழகு பெண் எதற்கு தன்னை தானே மாய்த்து கொள்ள வேண்டும் என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்
தூரிகை கபிலனின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகையின் தற்கொலை திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு செய்த இளம்பெண் எப்படி தற்கொலை முடிவை எடுத்திருக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை தவறு என தூரிகை வெளியிட்ட பதிவு இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தூரிகையின் மரணம் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.
அவரது பதிவில், 'கவிஞர் கபிலன் அவர்கள் மகள் மரணம் என்ற துயர செய்தி கேட்டு உறைந்து போயுள்ளேன். கண்களில் மின்னல், முகத்தில் புன்னகை.... அந்த அழகு பெண் எதற்கு தன்னை தானே மாய்த்து கொள்ள வேண்டும்? தற்கொலை எப்போதுமே எதற்குமே முடிவல்ல... பிரச்சினைகளின் ஆரம்பம். எனது அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை' என தெரிவித்துள்ளார்.
கவிஞர் கபிலன் அவர்கள் மகள் மரணம் என்ற துயர செய்தி கேட்டு உறைந்து போயுள்ளேன். கண்களில் மின்னல், முகத்தில் புன்னகை.... அந்த அழகு பெண் எதற்கு தன்னை தானே மாய்த்து கொள்ள வேண்டும்? தற்கொலை எப்போதுமே எதற்குமே முடிவல்ல... பிரச்சினைகளின் ஆரம்பம். No words to express my shock and sadness.
— Kasturi Shankar (@KasthuriShankar) September 9, 2022