பிரபல நடிகை 18 வயதில் அகால மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்
காட்ஸில்லா vs காங் படத்தில் நடித்த கெய்லீ ஹாட்டில் கார் விபத்தில் பலியானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெய்லீ ஹாட்டில்
ஹாலிவுட்டில் 2021ஆம் ஆண்டில் வெளியான காட்ஸில்லா vs காங் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றவர் கெய்லீ ஹாட்டில் (Kaylee Hottle).
அதனைத் தொடர்ந்து Magnum P.I என்ற தொலைக்காட்சி தொடரிலும், காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பையர் படத்தில் நடித்தார். 18 வயதான இவர் மேரிலாந்தில் நடந்த கார் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
பாலத்தின் மீது மோதி
செவ்வாய்க்கிழமையன்று அவரது குடும்பத்தினர் இறப்பினை உறுதிப்படுத்த, அதேவேளையில் வாகனம் சாலையை விட்டு விலகி சென்று ஒரு வடிகால் பாலத்தின் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இளம் வயதில் நடிகை கெய்லீ ஹாட்டில் உயிரிழந்தது திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதிக வேகம் விபத்திற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |