நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் எப்போது தெரியுமா? வெளியான திருமண அழைப்பிதழ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் "இது என்ன மாயம்" என்ற தமிழ் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
இதன் பின்னர் பைரவா, ரஜினி முருகன், மகாநதி, சர்கார், அண்ணாத்த உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தெறி மற்றும் பேபி ஜான் படத்தின் மூலமாக இந்தி சினிமாவிலும் அறிமுகமாகிறார்.
இவருக்கு திருமணம் நடைபெற போவதாக ஏற்கனவே சில முறை தகவல்கள் வெளிவந்தன. சமீபத்தில் கீர்த்தியே அதனை திருப்பதியில் உறுதிசெய்தார்.
அவரின் காதலன் பெயர் ஆண்டனி தட்டில். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும், துபாயில் வசித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
15 ஆண்டுகளாக இருவரும் நண்பர்களாக இருந்த இருவரும் இந்த மாதம் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷின் திருமண பத்திரிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில் இவர்களில் திருமணம் வருகின்ற டிசம்பர் 12ம் திகதி கோவாவில் நடைபெறவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |