கணவருடன் விவாகரத்து.. மகனை தத்துக்கொடுத்த சின்னத்திரை நடிகை: அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல சின்னத்திரை நடிகை கிருத்திகா, தனது விவாகரத்து பற்றியும், தனது மகனை தத்துக்கொடுத்தது பற்றியும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
நடிகை கிருத்திகா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டவர் இல்லம்' சீரியலில் நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இதற்கு முன் இவர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
நடனத்தில் ஆர்வம் கொண்ட கிருத்திகா, கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ''மானாட மயிலாட'' நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்பொழுது அவர் குடும்பத்தின் வற்புறுத்தலின் பெயரில் அருண் என்பவருடன் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் தன் மகனுடன் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டு தனக்கு விவாகரத்து ஆனதை பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது..
“திருமணம் ஆனதில் இருந்தே பல விஷயங்கள் எங்களுக்குள் ஒத்துப் போகாமல் இருந்தது. இதனால், பிரச்சினைகளும் வந்தது.
பின்பு, வீட்டில் எல்லோரும் பேசி முடிவெடுத்த பின்பே விவாகரத்து வாங்கினோம். ஆனால், அப்போது என் மகனிடம் யாராவது தந்தை குறித்துக் கேட்டால் கஷ்டப்படுவானோ என கவலைப்பட்டேன்.
ஆனால், அவனுக்கு அப்பாவாக இருந்து என் அண்ணன் அவனை வளர்த்து வருகிறார். என் அண்ணனுக்கு என் மகனைத் தத்துக் கொடுத்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |