உங்கள் வீட்டு பெண்களிடம் நாங்கள் அதையே கேட்டால் சரியா? நடிகை குஷ்பூ ஆவேசம்
உடல் எடை குறித்த கேள்வி சர்ச்சையில் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாக நடிகை குஷ்பூ பேசியுள்ளார்.
நடிகை கௌரி கிஷன்
திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிஷனிடம் யூடியூபர் ஒருவர் உடல் எடை குறித்து கேள்வி எழுப்பியது சர்ச்சையை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து கௌரி கிஷனுக்கு ஆதரவாக நடிகைகள் குஷ்பூ, ரோஹிணி, பாடகி சின்மயி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடிகை குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில், "பத்திரிகைத்துறை தனது தளத்தை இழந்துவிட்டது. பத்திரிகையாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பத்திரிகைத்துறையை சாக்கடைக்கு எடுத்துச் செல்கின்றனர்.
ஒரு பெண்ணின் எடை எவ்வளவு என்பது அவர்களின் வேலை இல்லை. அதைப் பற்றி ஒரு ஹீரோவிடம் கேட்கலாமா? வெட்கக்கேடு. தனது நிலைப்பாட்டில் நின்று அதற்கு பதிலடி கொடுத்த இளம் நடிகை கௌரி ஷங்கருக்கு பாராட்டுக்கள்.
உங்கள் வீட்டு பெண்களிடம் நாங்கள் இதே கேள்வியைக் கேட்டால் சரியாக இருக்குமா? மரியாதை என்பது எப்போதும் ஒருவழி போக்குவரத்து அல்ல. மதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள்" என கட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது மற்றொரு பதிவில் கௌரி கிஷனுக்கு பதிலாக கௌரி ஷங்கர் என்று குறிப்பிட்டதையும் பதிவிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |