நடிகை குஷ்பூ தமிழக பாஜக துணைத் தலைவராக நியமனம்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக நடிகை குஷ்பூ நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகை குஷ்பூ
தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி நடிகை குஷ்பூ, கரு.நாகராஜன், சக்கரவர்த்தி, V.P.துரைசாமி, K.P.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், AD சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், மா.வெங்கடேசன், K.கோபால்சாமி, N.சுந்தர் ஆகியோர் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஒப்புதலுடன் தமிழக பாஜகவுக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்...! தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..!" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |