சின்னத்திரை பக்கம் எட்டிப்பார்க்கும் குஷ்பு! ஆவலில் காத்திருக்கும் ரசிகர்கள்..
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை சீரியலில் நடிகை குஷ்பு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பது போன்ற ப்ரோமோ வெளியாகி வருகின்றது.
பெரும்பாலான தனியார் தொலைக்காட்சியில் சீரியல்களை வைத்தே தங்களது TRP ரேட்டிங்கை அதிகப்படுத்தி வருகின்றனர்.
அதுவும் சுயமாய் சிந்திக்காமல் மற்ற தொலைக்காட்சியை பின்பற்றி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் முன்னணி தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வருகின்ற ஹிட் சீரியல்களுள் ஒன்று கோகுலத்தில் சீதை. இந்த நாடகத்தில் நடிகை குஷ்பு தைரியமான, பொறுப்பான மங்கள டாக்டர் கதாபாத்திரத்தில் கலக்கயுள்ளார்.
இனிமேல் இந்த சீரியலில் ஏற்படும் புதிய திருப்பங்களை காண ரசிகர்கள் ஆர்வமாய் உள்ளனர்.