அஜித், விஜய் பட நடிகை மருத்துவமனையில் அனுமதி! தீவிர சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்
பிரபல நடிகை கே.பி.ஏ.சி லலிதா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் காதலுக்கு மரியாதை, பரமசிவன், சுயேச்சை எம்.எல்.ஏ, கிரீடம், அலைபாயுதே, சினேகிதியே, மாமனிதன் உள்பட பல படங்களில் நடித்துள்ளவர் கே.பி.ஏ.சி லலிதா.
இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 74 வயதான லலிதா, கல்லீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நேற்று சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.