எனது நாடு கனடா; இலங்கை அல்ல தமிழ் ஈழப்பெண் அடையாளத்தையே விரும்புகிறேன் - இளம் நடிகை

Tamils Sri Lanka
By Sivaraj Sep 23, 2026 02:01 PM GMT
Report

Actress maitreyi ramakrishnan changed dialogue tamil identity: கனடாவைச் சேர்ந்த நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன், தன்னை தமிழ் ஈழப்பெண் என்று அடையாளப்படுத்தவே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் என்பதற்கு பதிலாக தமிழ் ஈழப்பெண் என்ற அடையாளத்தையே விரும்புகிறேன் என கனடாவைச் சேர்ந்த நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

மைத்ரேயி ராமகிருஷ்ணன்

நெவர் ஹேவ் ஐ எவர், தி பாய்ஸ் தொடர்களிலும், ஃப்ரீகியர் ஃப்ரைடே மற்றும் நெட்பிலிக்சில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள 'பெஸ்ட் ஆப் பெஸ்ட்' திரைப்படங்களில் நடித்தவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன். 

Maitreyi Ramakrishnan 

ஆல்பர்ட்டா மாகாணம் சுதந்திரம் பெறும் விவகாரம்: 610,000ஐ தாண்டிய தபால் வாக்குகள்

ஆல்பர்ட்டா மாகாணம் சுதந்திரம் பெறும் விவகாரம்: 610,000ஐ தாண்டிய தபால் வாக்குகள்

24 வயது நடிகையான இவர் கனடாவின் Mississauga பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். எனினும் இலங்கை ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது பேசியுள்ள விடயம் பேசுபொருளாகியுள்ளது.

மைத்ரேயி தனது புதிய நெட்பிலிக்ஸ் திரைப்படத்தின் (பெஸ்ட் ஆப் பெஸ்ட்) விளம்பர நடவடிக்கையின்போது, தன்னை ஒரு "தமிழ் ஈழப் பெண்" என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து, தனது அடையாளம் குறித்த கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

அதாவது, "எனது கலாச்சாரம் தமிழ். எனது நாடு கனடா; இலங்கை தமிழர் என்பதற்கு பதிலாக தமிழ் ஈழப்பெண் என தன்னை அடையாளப்படுத்தவே விரும்புகிறேன்" என மைத்ரேயி ராமகிருஷ்ணன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தன்னை இலங்கைத் தமிழராக கருதாமல் 'தமிழ்-கனேடியர்' என்றே அடையாளப்படுத்திக் கொள்வதாகவும் மைத்ரேயி குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த அடையாள வெளிப்பாடு அப்படத்திலும் இடம்பெற்றுள்ளது. 

Maitreyi Ramakrishnan

ஒரு காட்சியில் மைத்ரேயியை ஒரு கதாபாத்திரம் இந்தியர் என்று தவறாக கருதுகிறது. அதற்கு அவர், "நான் தமிழர். என் குடும்பத்தினர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்" என்று திருத்தம் செய்கிறார். 

நான் தமிழர்

ஆனால், அந்த காட்சியின் முந்தைய வடிவத்தில் மைத்ரேயி, தன்னை "இலங்கைத் தமிழர்" என்று குறிப்பிடுவது போல் அமைக்கப்பட்டிருந்தது.

பின்னர் தன்னை அவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ளாததால், அந்த வசனத்தை மாற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார். தனது சொந்தக் குடும்பப் பின்னணியைக் கொண்டு இதற்கான வித்தியாசத்தை அவர் விளக்கியிருக்கிறார். அவரது பெற்றோர் இலங்கையில் வளர்ந்தவர்கள்; பின்னர் உள்நாட்டுப் போரின் காரணமாக அங்கிருந்து புலம்பெயர்ந்துள்ளனர். 

Maitreyi Ramakrishnan

மைத்ரேயி தனது இலங்கை அடையாளத்தில் இருந்து விலகி செல்வதாக கருதும் தரப்பினர், அவரது இந்த கருத்துகளால் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால் மீது எதிர்மறையான விமர்சனங்கள் கிளப்பியுள்ளன. அவருக்கு எதிராக இலங்கையைச் சேர்ந்த பல இணையப் பக்கங்களும் கருத்துக்களை பதிவிடுகின்றன.

அதே சமயம் தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர் தன்னை ஒரு தமிழர் என்று அடையாளப்படுத்துவதை வேறு பலரும் வரவேற்றுள்ளனர்.   

Maitreyi Ramakrishnan

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US