நடிகர் தனுஷ் கூட அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டாங்க.., பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு
நடிகர் தனுஷூடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி அவரின் மேலாளரிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாக சீரியல் நடிகை மான்யா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சீரியல் நடிகை குற்றசாட்டு
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தைப் போல சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மான்யா ஆனந்த்.
இந்த தொடரில் அவர் நடித்த துளசி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனைத்தொடர்ந்து கயல், அன்னம் , மருமகள் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

அந்தவகையில், அண்மையில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றில் மான்யா, தான் சீரியலுக்கு நடிக்க வந்த பின்னணி குறித்து பேட்டி அளித்திருந்தார்.
மேலும், எந்த காரணத்திற்காகவும் தான் கிளாமர் காட்சிகளில் , நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தனுஷின் மேலாளரிடம் இருந்து தனக்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்யசொல்லி தனக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், தனுஷின் மேலாளரிடம் இருந்து தனக்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்யசொல்லி தனக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சீரியல் நடிகை மான்யா ஆனந்தின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |