கணவர் மறைவால் வாடிய நடிகை மீனா.. பிறந்த நாளில் தோழிகள் கொடுத்த பரிசு
நடிகை மீனாவின் பிறந்தநாளை கொண்டாட ஒன்று கூடிய திரையுலக தோழிகள்
தோழிகள் கொடுத்த ஆச்சரியத்தால் மகிழ்ச்சியில் திளைத்த நடிகை மீனா
நடிகை மீனாவின் பிறந்தநாளில் அவரது திரையுலக தோழிகள் நேரில் வாழ்த்து கூறி ஆச்சரிப்படுத்தினர்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. கணவர், குழந்தை என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். சமீபத்தில் அவரது கணவரின் திடீர் இறப்பு மீனாவை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.
அவருக்கு திரையுலக தோழிகளான கலா, ரம்பா உள்ளிட்டோர் ஆறுதல் கூறி தேற்றினர். இந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி மீனா தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவரை சோகத்தில் இருந்து மீட்டெடுக்க நடிகை ராதிகா உணவகத்திற்கு அழைத்து சென்று விருந்து கொடுத்துள்ளார். மேலும் நடிகைகள் ரம்பா, சங்கவி, சங்கீதா ஆகியோர் மீனாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி ஆச்சரியப்படுத்தினர்.
அவர்களுடன் மகிழ்ச்சியாக பிறந்தநாளை கொண்டாடிய மீனாவுக்கு நடன இயக்குனர் கலா சர்ப்ரைஸ் கொடுத்தார். மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இதனை பார்த்த ரசிகர்கள் துயரில் இருந்து நடிகை மீனா மீண்டு வந்துள்ளார் என்றும், அவரை மகிழ்ச்சிப்படுத்த பிரபலங்கள் ஒன்று கூடியுள்ளதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருப்பதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.