பாஜகவில் இணையும் நடிகை மீனா? இன்ஸ்டாகிராம் பதிவால் பரபரப்பு
நடிகை மீனா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை மீனா
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா.
2022 ஆம் ஆண்டு கணவரின் மறைவிற்கு பின்னர் நடிப்பதை குறைத்து கொண்ட அவர், தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்.
இந்நிலையில், நடிகை மீனா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் இணையும் மீனா?
முன்னதாக, மோடி பங்குபெறும் சில நிகழ்ச்சிகளில் மீனா கலந்து கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கரை சந்தித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், "மாண்புமிகு துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் ஜி, தங்களை சந்தித்ததை பெரும் கவுரவமாக கருதுகிறேன்.
தங்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன், அவை என்னுடைய எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் என நம்புகிறேன், உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவில், அரசியல் இணைவதற்கு வாழ்த்துக்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வரும் நிலையில், அரசியலுக்கு சென்றாலும் நடிப்பை தொடர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஏற்கனவே, அவரது சக நடிகைகளான ராதிகா, குஷ்பூ, கலா மாஸ்டர் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |