நடிகை மீனா கொடுத்த அதிர்ச்சியால் தேம்பி அழுத கலா மாஸ்டர்! வைரலாகும் புகைப்படங்கள்
தோழி கலா மாஸ்டரின் திருமண விழாவிற்கு திடீரென வருகை புரிந்த நடிகை மீனா
நடிகை மீனாவின் வருகையால் கண்கலங்கிய நடன இயக்குனர் கலா
நடன இயக்குனர் கலாவின் திருமண விழாவிற்கு சென்று நடிகை மீனா அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். சமீபத்தில் நடிகை மீனா தனது கணவரை இழந்தபோது, அவருடன் இருந்து கவனித்துக் கொண்டவர் நடன இயக்குனர் கலா.
அதுமட்டுமன்றி மீனாவின் பல சுக, துக்க நிகழ்வுகளில் கலா மாஸ்டர் பங்குபெற்று வருகிறார். இந்த நிலையில் தனது 18வது திருமணநாளை கலா மாஸ்டர் கொண்டாடினர்.
இதற்காக தனது தோழி மீனாவை அவர் அழைத்துள்ளார். ஆனால் அவரோ தான் ஊரில் இல்லை என்று கூறியதால், கலா மாஸ்டர் வருத்தம் அடைந்துள்ளார்.
எனினும், நேற்றைய தினம் திடீரென கலா மாஸ்டரின் திருமணநாள் விழாவில் மீனா பங்கேற்றார். இதனை சற்றும் எதிர்பாராத கலா மாஸ்டர் கண்கலங்கினார்.
மேலும் சமூக வலைதள பக்கத்தில் கொண்டாட்ட தருணங்களின் புகைப்படங்களை நடன இயக்குனர் கலா பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.