கணவர் இறந்த சில தினங்களில் வந்த 13வது திருமண நாள்! கலங்கி நிற்கும் நடிகை மீனா
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இன்றைய தினம் மீனா -வித்யாசாகரின் திருமண நாள் ஆகும். கடந்த 2009ல் இதே நாளில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அதன்படி இருவருக்கும் இன்று 13வது ஆண்டு திருமண நாள் ஆகும்.
கடந்த 28ஆம் திகதி கணவர் இறந்தவுடன் அவரின் இறுதிச் சடங்குகளை தானே முன்னின்று நடத்தினார் மீனா. கணவரின் அஸ்தியுடன் அவர் நடந்து வந்தது அனைவரையும் கண்கலங்க செய்தது.
வித்யாசாகர் இறந்து சில தினங்களே ஆன நிலையில் இன்றைய தினம் தனது கணவர் இல்லாத முதல் திருமண நாளை எதிர்கொண்டுள்ளார் மீனா. கடந்த ஆண்டில் இதே நாளில் தனது கணவர் தன்னுடைய வாழ்க்கையில் வானவில் போன்றவர் என்று மீனா, இருவரின் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் வித்யாசாகர் இல்லாத கொடுமையை அனுபவித்து வருகிறார். இது காலத்தின் கோலம் என்பதை தவிர வேறு எப்படி சொல்வது?..