மனைவி கர்ப்பமாக இருந்த போது குறைந்த வயதில் மாரடைப்பால் இறந்த அர்ஜூனின் உறவினரான பிரபல நடிகர்! முதல் நினைவு நாளில் மனைவியின் உருக்கமான பதிவு
பிரபல நடிகர் சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்து ஓராண்டு ஆன நிலையில் அவர் மனைவி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகரக இருந்த சிரஞ்சீவி சார்ஜா கடந்தாண்டு ஜூன் 7ஆம் திகதி கடுமையான மாரடைப்பால் குறைந்த வயதில் உயிரிழந்தார்.
பிரபல நடிகர் அர்ஜுனின் உறவினர் தான் சிரஞ்சீவி சார்ஜா. சிரஞ்சீவியின் மனைவியான பிரபல நடிகை மேக்னா ராஜ், அவர் இறக்கும் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கணவர் இறந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் உருக்கமான பதிவை மேக்னா வெளியிட்டுள்ளார்.
அதில், சிரஞ்சீவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டார். பதிவில் கூறுகையில், US. MINE #Chiranjeevisarja (sic) என பதிவிட்டுள்ளார்.