தாய்மை என்னும் புதிய அத்தியாயம் தொடங்கியது! கர்ப்பத்தை அறிவித்த நமீதா
நமீதா குஜராத் மாநிலம், சூரத்தில் பிறந்தார். நமீதா கடந்த 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார்.
கடந்த 2003-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து ஏய், இங்கிலீஷ்காரன், பம்பர கண்ணாலே, கோவை பிரதர்ஸ், நான் அவன் இல்லை போன்ற படங்களில் கிளாமர் ரோல்களில் நடித்ததன் மூலம் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார்.
இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் பில்லா. இவர் தமிழைப்போல் இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் பங்கேற்றுள்ளார்.
இவர் 2017-ம் ஆண்டு நமீதா - வீரேந்திர செளத்ரியுடன் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில் நமீதா தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது பிறந்தநாளான இன்று அறிவித்திருக்கிறார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, “தாய்மை... புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது. நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு நாள் வேண்டினேன். உன் மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகள், அனைத்தையும் என்னால் உணர முடிகிறது, நான் இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீ உருவாக்குகிறாய்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதனை பார்த்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தாகும்.