பிரபல நடிகை நந்திதாவின் தந்தை திடீர் மரணம்! வேதனையுடன் வெளியிட்ட பதிவு
பிரபல திரைப்பட நடிகையான நந்திதா ஸ்வேதாவின் தந்தை மரணமடைந்துள்ளது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் அட்டகத்தி திரைப்பட மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை நந்திதா. அதன் பின் பல்வேறு தமிழ் படங்களில் நடித்து வந்த இவர், தற்போது சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.
இருப்பினும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், சற்று முன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தன்னுடைய தந்தை சிவசாமி 54 வயதில் உயிரிழந்துவிட்டதாகவும், அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
This is to inform all my wellwishers that My father Mr.shivaswamy aged 54 passed away today. May his soul rest in peace
— Nanditaswetha (@Nanditasweta) September 19, 2021
இதைக் கண்ட திரைப்பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஸ் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டுள்ளார். அதே போன்று பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.