''லேடி சூப்பர் ஸ்டார்னு சொன்னாலே திட்டுகிறார்கள்''- நடிகை நயன்தாரா
தமிழ் திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என பிரமாதப்படுத்தப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது, “லேடி சூப்பர் ஸ்டார்னு சொன்னால் திட்டுகிறார்கள்” என்று கூறியிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.
நடிகை நயன்தாரா
தமிழில் ''ஜயா'' படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இரண்டாவது படமே அவருக்கு நடிகர் ரஜினிகாந்துடன் ''சந்திரமுகி'' யில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதற்கடுத்தடுத்த படங்களின் வெற்றி காரணமாக நயன்தாரா தொடர்ந்து தமிழில் இருபது வருடங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
அவரது 75-வது படமாக தற்போது ''அன்னபூரணி'' வெளியாகியுள்ளது. இதுகுறித்தான நேர்காணலில் தான் ''லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் திட்டுகிறார்கள'' என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது...
அந்த நேரகாணலில், ''லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலே என்னைத் திட்டுகிறார்கள். இன்னும் நான் அந்த இடத்திற்கு வரவில்லையா.. அல்லது பெண் என்ற காரணத்தினால் அது இருக்கக்கூடாது என நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை.
''லேடி சூப்பர் ஸ்டார்'' எனச் சொல்லும்போது பத்து பேர் பெருமையாக சொல்கிறார்கள். ஆனால், ஐம்பது பேர் திட்டுகிறார்கள்.
நான் செய்ய விரும்பும் கதைகள் எதுவும் அந்த டேகிற்காக கிடையாது. ரசிகர்கள் கொடுக்கும் அன்பிற்காகதான் அதை எடுத்துக் கொண்டேன்'' என்று சொன்னார் நயன்தாரா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |