நடிகை நயன்தாரா மருத்துவமனையில் அனுமதி!
* விக்னேஷ் சிவன் சமைத்த உணவை சாப்பிட்டதால் நயன்தாராவுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தகவல்
* மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின்னர் நயன்தாரா வீடு திரும்பினார்
நடிகை நயன்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சரத்குமார், சூர்யா, ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. மேலும் அதை இயக்கும் பணிகளை கெளதம் மேனன் மேற்கொண்டார். இதனிடையே திருமணம் புகைப்படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் சமைத்த உணவை சாப்பிட்டதால் நயன்தாராவுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் நயன்தாரா வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.