நடிகை ஓவியாவின் தைரியம்! மோடியின் வருகைக்கு வெளிப்படையாக எதிர்ப்பு: பாராட்டி தள்ளும் ரசிகர்கள்
பிரபல திரைப்பட நடிகையான ஓவியா, பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை செல்லவுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.35 மணிக்கு சென்னை செல்லும் அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கவுள்ளனர்.
விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர் அங்கிருந்து காரில் விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு செல்கிறார்.
11.15 மணி முதல் 12.15 மணி வரை அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட அர்ஜூன் ரக பீரங்கியை இராணுவத்திடம் ஒப்படைக்கிறார்.
மேலும், விரிவுபடுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கவுள்ளார். அதன் பின் முக்கிய நபர்களுடன் சந்திப்பை நடத்தவுள்ளார்.
அப்போது சசிகலா வருகை, தமிழக அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரை ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் பொலிசார் ஈடுபட உள்ளனர்.
மோடியின் வருகையை எதிர்த்து இணையத்தில் GOBACKMODI என்ற ஹேஷ்டேக்கை டிரண்டாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ஓவியா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை டிரண்ட் செய்து வருகிறார்.
இதைக் கண்ட இணையவாசிகள் என்ன ஒரு தைரியம், இப்படி ஒரு வெளிப்படையான டுவிட் என்று பாராட்டி தள்ளி வருகின்றனர்.