பாலியல் புகார்கள் குவிந்த வைரமுத்துவுக்கு விருதா? கொந்தளித்த பிரபல நடிகை
கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது கிடைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல நடிகை பார்வதி ட்விட்டரில் கொந்தளித்துள்ளார்.
பிரபல மலையாள கவிஞரும், பாடலாசிரியருமானவர் ஓ.என்.வி. குறுப். ஞானபீட விருது பெற்ற அவரின் பெயரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஓ.என்.வி. இலக்கிய விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது. மலையாளி அல்லாத ஒரு படைப்பாளிக்கு ஓ.என்.வி. விருது கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் வைரமுத்துவுக்கு இந்த விருதை கொடுத்ததற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பார்வதில் தமிழில் பூ, சென்னையில் ஒரு நாள், மரியான், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சியும் இன்னும் சில பெண்களும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
— Parvathy Thiruvothu (@parvatweets) May 27, 2021
அவரின் டுவிட்டர் பதிவில், ஓ.என்.வி. சார் நம் பெருமைக்குரியவர். ஒரு கவிஞராகவும், பாடலாசிரியராகவம் அவர் ஆற்றிய பங்கை யாருடனும் ஒப்பிட முடியாது.
அவரின் படைப்புகள் மூலம் நாம் அடைந்த நன்மைகளுக்கு ஈடே இல்லை. அதனால் தான் அவர் பெயரில் இருக்கும் இப்படிப்பட்ட கௌரவமான விருதை பாலியல் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு வழங்குவது அவமரியாதையாகும் என தெரிவித்துள்ளார்.
அதாவது பாடகி சின்மயி உள்ளிட்ட சில பெண்கள் வைரமுத்து மீது பாலியல் புகார் ஏற்கனவே கூறியுள்ள நிலையில் பார்வதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.