அவர் ஒரு சைக்கோ! என் புகைப்படங்களை வைத்து மிரட்டல்... வீட்டு பணியாளர் மீது தமிழ் நடிகை புகார்
என் புகைப்படங்களை அனுமதி இல்லாமல் எடுத்து கொண்டு வீட்டு பணியாளர் மிரட்டுவதாக நடிகை பார்வதி நாயர் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகை
தமிழில் நடிகர் அஜித்குமாருடன் “என்னை அறிந்தால்”, “உத்தமவில்லன்”,“மாலை நேரத்து மயக்கம்”, “நிமிர்” போன்ற படங்களில் நடித்துள்ளவர் பார்வதி நாயர். சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் பார்வதி வீட்டில் சந்திரபோஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது வீட்டிலிருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரு வாட்ச்கள், 50 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி, செல்போன் உள்ளிட்ட 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றுவிட்டதாக பார்வதி குற்றம்சாட்டியுள்ளார்.
starsbiog
பணியாளர் மிரட்டுகிறார்
இது தொடர்பாக பொலிசில் புகார் அளித்துள்ளார். மேலும், சுபாஷ் தொடர் மிரட்டல்களாலும், தேவையற்ற வதந்திகளாலும் தனது சினிமா வாழ்க்கையை அழிக்க முயல்வதாக தெரிவித்துள்ள பார்வதி என்னுடைய அனைத்து போட்டோக்களையும் எனது அனுமதி இல்லாமல் எடுத்து மிரட்டுவதாகவும், அவர் ஒரு சைக்கோ எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையில் பார்வதி மீது சுபாஷ் கொடுத்த புகாரில், அவர் அடித்து துன்புறுத்தி மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார். வேண்டுமென்றே என் மீது திருட்டு பட்டம் கட்டியுள்ளார். அவர் வீட்டிற்கு நிறைய ஆண் நண்பர்கள் வருவார்கள் தெரிவித்தார்.
பொலிசார் இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.