2வது திருமணமா? வெளிப்படையாக பேசிய பிக்பாஸ் பாவனி
நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தை பிடித்தவர் நடிகை பாவனி ரெட்டி.
ரெட்டைவால்குருவி என்ற தொடரின் மூலம் பிரபலமான பாவனி, பல சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார்.
கடந்த 2016ம் ஆண்டு சக நடிகரான பிரதீப் என்பவரை காதலித்து கரம்பிடித்தார், ஆனால் எதிர்பாராதவிதமாக பிரதீப் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாவனி, சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அசத்தினார், அபினய்யுடன் பழக்கம், அமீரின் காதல் தொந்தரவுகளுக்கு மத்தியில் மூன்றாவது இடத்தை பிடித்துவிட்டார் பாவனி.
இந்நிலையில் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் பாவனி உரையாடிய போது, திருமணம் குறித்து கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு, என் வாழ்க்கையில் இனி திருமணம் என்பது இல்லை. என்னுடைய முழு கவனமும் இனி சினிமா, நடிப்பு என்பதில் தான் இருக்க போகிறது என பதிலளித்துள்ளார்.