அஜித் பட நடிகை வீட்டில் திடீர் ரெய்டு: வெளியான தகவல்
அஜித் பட நடிகை பேர்லே மானே வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
நடிகை பேர்லே மானே
மலையாள சேனல்களில் தொகுப்பாளராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்தான் பேர்லே மானே.
இதனையடுத்து இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தனர். இதனையடுத்து, 'நீலகாஷம் பச்சகடல் சுவன்ன பூமி', 'தி லாஸ்ட் சப்பர்', 'டபிள் பேரல்', 'பிரீத்தம்' உட்பட படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ படத்தில் நடித்ததால் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
மலையாளத்தில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் பிடித்த அவர் பிக்பாஸில் கலந்து கொண்ட மற்றொரு போட்டியாளரான ஸ்ரீனிஷ் அரவிந்த் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இத்தம்பதிக்கு அழகான குழந்தை ஒன்று உள்ளது. பேர்லே மானே நடிகை மட்டுமல்ல, யூ டியூபராகவும் வலம்வருகிறார்.
வருமான வரித்துறையினர் சோதனை
இந்நிலையில், நடிகை பேர்லே மானே வீட்டில் திடீரென்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதாவது, கேரளாவில் யூடியூபர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக போலீசாருக்கு புகார்கள் குவிந்தது.
இதனையடுத்து, கேரளாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் யூடியூப்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், நடிகை பேர்லே மானே வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் முக்கியமான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |